fbpx
Others

கடந்த ஆண்டில் மெட்ரோ ரெயிலில் 6 கோடி பேர் பயணம் …..?

சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளொன்றுக்கு சராசரியாக 2.2 லட்சம் பேர் முதல் 2.3 லட்சம் பேர் வரை பயணிக்கிறார்கள். நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 2 கோடியே 80 லட்சம் பேர் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டில் 3 கோடியே 28 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 2020-ம் ஆண்டில் கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக சேவை நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த ஆண்டில் மெட்ரோ ரெயிலில் 6 கோடி பேர் பயணம் ஆண்டில் 1 கோடியே 18 லட்சம் பேர் மட்டுமே பயணித்திருந்தனர். 2021-ம் ஆண்டில் (மே, ஜூன் சேவைகள் இல்லை) 2 கோடியே 53 லட்சம் பேர் பயணித்திருந்தனர். கடந்த 2022-ம் ஆண்டில் 6 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். இதுவரை சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த 7 ஆண்டுகளில் (2015 – 2022) 15 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 208 பேர் பயணித்துள்ளனர். மேற்கண்ட தகவல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close