fbpx
Others

பிரதமரின் கல்வித் தகுதி கேட்டகெஜ்ரிவால்…? 25 ஆயிரம் ரூபாய் அபராதம்

பிரதமரின் கல்வித் தகுதி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்... ரூ.25,000 அபராதம் விதித்த குஜராத் நீதிமன்றம்..!
  • பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை குஜராத் நீதிமன்றம் விதித்துள்ளது.    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் முதுகலை பட்டத்தின் விவரங்களை வழங்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையம் எனப்படும் சிஐசி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.  பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட தேவையில்லை என்றும், விவரங்களை கேட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் எவ்வளவு படித்துள்ளார் என்பதை அறியும் உரிமை கூட நாட்டிற்கு இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close