fbpx
Others

ஜாலியாஒருநடை….பணி இடமாற்றம்கொடுத்துவிட்டது

ஒய்யார நடைபோட்ட போலீசார்  கூண்டோடு டிரான்ஸ்பர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தனியார் நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஸபேஷன் ஷோ நடந்தது. இதில் திரைப்படி நடிகை யாஷிகாஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.இதில் சிறுவர். சிறுமிகள், ஆண், பெண்கள் என்று நவீனஆடைவடிமைப்புகளுடன் ஓய்யார நடை (ரேம்வாக்) போட்டி நடந்தினர். இதில்போட்டியில்பங்கேற்பவர்கள், பார்வையாளர்கள், விஐபிகள் என்று அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே போட்டி நடத்தப்பட்ட இடத்திற்குள்அனுமதிக்கப்பட்டனர்.இதற்குபாதுகாப்பிற்காக போலீசாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒய்யாரநடை போட்டிகள் முடிந்த நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கவுரவிப்பதற்காக மேடையில் அழைத்து பாராட்டியுள்ளனர். அப்போதுதொகுப்பாளர்கள்போலீசாரைரேம்வாக்நடக்கச்சொல்லிஅன்புதொல்லை கொடுத்துள்ளனர். அதனால் காக்கிஉடையில் போலீசார் ஜாலியா ஒரு ஒய்யாரநடையை போட்டுவிட்டு மேடையைவிட்டு இறங்கியுள்ளனர்.

போலீசார் ஒய்யாரநடை போட்ட செய்திகள் உயர் அதிகாரிகள் காதுகளுக்கு செல்ல போலீசாரே காக்கிஉடையின் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்தி இதுபோல் நடந்துகொள்ளலாமா என்று உயரதிகாரிகளை கண்டித்ததோடு ரேம்வாக் சென்ற ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 5 போலீசாரையும் ஆணைக்காரன்சத்திரம், சீர்காழி, மணல்மேடு, மயிலாடுதுறை என்று பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்குபணி இடமாற்றம் செய்து எஸ்.பி   உத்தரவிட்டுள்ளார். தொகுப்பாளர் வற்புறுத்தியதால்ஜாலியாஒருநடைபோட்டது ஜோலியேகொடுத்துவிட்டது என்று போலீசார் புலம்பிவருகின்றனர்….?

Related Articles

Back to top button
Close
Close