fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ரயில் டிக்கெட்டுகளை பெற கியூஆர் கோடு…! ரயில்வே அறிமுகம்!

QR code for train ticket booking

டெல்லி:

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே துவக்கி உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து தனிமனிதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதன்படி வடமேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற கியூ-ஆர் கோடு முறையை அறிமுகம் செதுள்ளது.

இது குறித்து கூறப்பட்டு இருப்பதாவது: டிக்கெட் பரிசோதகர்கள் கியூ-ஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் டிக்கெட்டுகளை சரிபார்க்கத்துவங்கி உள்ளனர். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதாக பெற 12 ரயில் நிலையங்களுக்க கியூ-ஆர் கோடுகளை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே ஒரு சில நாட்களுக்கு முன்னர் துவங்கி உள்ளது.

இதன்மூலம் ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிகானேர், அபு ரோடு, உதய்பூர் நகரம், துர்காபுரா, ஆல்வார், ரேவாரி, சங்கனேர், லல்கர், மற்றும் காந்திநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் காகிதமில்லாமல் முன்பதிவு செய்யப்படாத மொபைல் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யுடிஎஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மொபைலில் பதிவிறக்கம்செய்த பின்னர் , பயனர் ‘பதிவு’ மற்றும் ‘உள்நுழைவு’ செயல்முறையை முடிக்க வேண்டும்.

உள்நுழைவை முடித்த பிறகு, ‘புத்தக டிக்கெட்’ மெனுவில் கியூ ஆர் முன்பதிவைத் தேர்ந்தெடுத்து ரயில் நிலையத்தின் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். கியூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ததைத் தொடர்ந்து, டிக்கெட் பெறுவதற்கான மேல் நடவடிக்கையை துவங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close