fbpx
RETamil Newsஇந்தியாஉலகம்

இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் பீதி

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா மாகாணத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக அடுத்து 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6-ஆகவும் பதிவானது.

மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியநேரப்படி மாலை 3 மணியளவில் அடுத்தடுத்து இரு முறை ஏற்பட்டதால் மக்கள் அதிக அளவில் பீதி அடைந்தனர்.

இவ்வாறு பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும், தெருக்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதேபோல் பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியநேரப்படி மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு ஒரே நாளில் இரு இடங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related Articles

Back to top button
Close
Close