fbpx
Others

 *தேனி மாவட்டத்தில் குழந்தைகளை (பிச்சை) கையேந்த வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை தேவை.

  தமிழ்நாடு சமூகநலபத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு” வேண்டுகோள்…!

சீசன் பறவை போல இக்கும்பல்களுக்கு சீசன் பொழப்பாக வருடா வருடம் தொடர்கதையாக அரங்கேற்றி வருகின்றனர்.*ஒரு பகுதியில் பொது மக்களுக்கும் பொது போக்குவரத்திற்கும் இடையூறு என்றால் முதலில் வருவது காவல்துறை. அந்த காவல்துறையின் மூலம் இவர்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக சமூக பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.*தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமனூர் கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளில் ஒரு சில சமூக விரோத கும்பல்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி கையேந்தும் தொழிலில் ஈடுபடுத்திவருகின்றனர். *குறிப்பாக, தேனி மாவட்டத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் உள்ள தெருக்கள்,புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடும்பத்தோடு கும்பல்,கும்பலாக இந்து மதத்தை அவமதித்து கையேந்தி வருகின்றனர். *உதாரணத்திற்கு சின்னமனூர் நகராட்சியில் சின்னமனூர் டூ கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை, துணிக்கடை மற்றும் முக்கிய வணிக தளங்கள் உள்ள பகுதிகளில் ஓம் சக்திக்கு சிவப்பு வண்ணம், முருகனுக்கு பச்சை வண்ணம், மாரியம்மனுக்கு உரித்தான மஞ்சள் வண்ண உடுப்புகளை உடுத்திக் கொண்டும்,பெயரளவிற்கு ஒரு மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு இந்து மக்களின் மத நம்பிக்கையை மழுங்கடிக்கும் விதமாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் செயலாக நகரினில் மேற்கண்ட முக்கிய தெருக்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூலதனமாக்கி கையேந்தும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வரும் படலம் தொடர்ந்து வருவதாக நகரவாசிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.*தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் சிறுவர்களை வைத்து கையேந்தும் அவல நிலையை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென “தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு” மற்றும் மாவட்ட வாழ் பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்…… யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close