ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை…
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் உயர் நீதிமன்றம் நியமித்த ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, விஜயிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவிசாரிக்கஇருப்பதாகவும்,
தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதில் 18 பெண்கள், 5 சிறுவர்கள், 13 ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும்நூற்றுக்கும்மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது திருச்சி மற்றும் மதுரையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதற்கு தலைவராக ஐஜி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்பு புலனாய்வுகுழுவில்இரண்டுஎஸ்பிக்கள்,ஒருஏடிஎஸ்பி,இரண்டுடிஎஸ்பி,ஐந்துஇன்ஸ்பெக்டர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடுகாவல்துறையிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முதல் கட்ட ஆவணங்களை பெற்ற சிறப்பு புலனாய்வு குழு நேற்று கரூர் சென்றதுவடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று நண்பகலில் வேலுச்சாமிபுரம் சென்றனர். அங்கு விஜய் பிரச்சாரம் செய்த இடம், அவரது பேருந்து நின்ற இடம், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இடம், சாலையில் நெரிசல் ஏற்பட்ட பகுதிகள், முறிந்து விழுந்த மரக்கிளைகள், தாவிகுதித்ததொண்டர்கள்ஏறியதாகசொல்லப்படும்டிரான்ஸ்பார்மர்உள்ளிட்டவற்றைபார்வையிட்டனர்.தொடர்ந்துசைபர்கிரைம்எஸ்.ஐ,தனிப்பிரிவுபோலீசாரிடமும்அஸ்ராகார்க்விசாரணைநடத்தினார்.இதற்கிடையே நடிகர் விஜய் இடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேரடி சாட்சியங்களிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி விஜயிடம் விசாரிக்க வேண்டும் என சிறப்புபுலனாய்வுகுழுதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தேவைப்பட்டால் விஜயை கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் சொன்னதையும் இங்கேகவனிக்கவேண்டும்இந்தநிலையில்விஜயின்ஆதரவாளர்கள்மீதுஅடுத்தடுத்துவழக்குபதிவுசெய்யப்பட்டுவருவதுகுறிப்பிடத்தக்கது.ஏற்கனவேகரூர்மாவட்டசெயலாளர்மதியழகன், தமிழகவெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஷி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீதுவழக்குபதிவுசெய்யப்பட்டிருக்கும்நிலையில்தான்தொண்டர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக விஜயின் பிரச்சார பேருந்தின் ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவுகளின் கீழ் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.