fbpx
Others

ஈரோடு–புஞ்சைபுளியம்பட்டிவியாபாரிகள் திடீர் கடையடைப்பு …

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தினசரி சந்தை இரவு 7 மணிக்கு மேல் செயல்படுவது தொடர்பாக அண்ணா அனைத்து வாரச் சந்தை வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகி, வாரச்சந்தை குத்த கைதாரர் இடையே கடந்த 20-ந் தேதி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

. இதுதொடர்பாக தினசரி மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் புஞ்சைபுளியம் பட்டி போலீஸ் நிலையத்தில் அண்ணா அனைத்து வாரச் சந்தை வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.இந்த நிலையில் நகராட்சி ஆணையாளரிடம், அண்ணா அனைத்து வாரச்சந்தை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வாரச்சந்தை வியாபாரிகளிடம் குத்தகைதாரர் அதிகப்படியான சுங்கம் வசூலிக்கிறார்’ என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அவதூறு பரப்பி வரும் தினசரி மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் நலச்சங்கத்தை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடை பெறும் எனவும் அறிவித்தனர்.இந்த நிலையில் நேற்று தினசரி சந்தை வியாபாரிகள் திடீ ரென கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்ததகவல் கிடைத்ததும் பண்ணாரி எம்.எல்.ஏ. நகராட்சி என்ஜினீயர் கவிதா ஆகியோர் அங்கு சென்று வியாபாரிகளி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு வியாபாரிகள். ‘புழுதி படிந்து காணப்படும் தினசரி சந்தையை சுத்தம் செய்ய வேண்டும் என்றனர் அதற்கு என்ஜினியர், ‘நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்படும்’ என தெரிவித்தார் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ் குமார்

Related Articles

Back to top button
Close
Close