fbpx
ChennaiGeneralOthersREஅரசியல்தமிழ்நாடு

தொகுதி நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்தவிடாமல் அரசு தடுக்கின்றது -மு.க.ஸ்டாலின்!

stalin speak about funds

சென்னை:

கொரோனா நேரத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த விடாமல் அ.தி.மு.க அரசு தடுக்கின்றது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான சுமார் மூன்று கோடி ரூபாயில் சட்டமன்ற உறுப்பினர்களின் அனுமதி இன்றி கொரோனா தடுப்பு பனிக்களுக்காக 1 கோடி ரூபாயை அரசு நேரடியாக எடுத்துக்குக்கொள்ளும் என்று தனிச்சையா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அப்படி எடுத்துக்கொள்ளப்பட்ட சுமார் 234 கோடி ரூபாயை  மாநில அளவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட உள்ளதாக கூறியிருந்தார். மேலும் அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா பணிகளுக்காக சுமார் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் உள்ள சுமார் 1.75 கோடி ரூபாயை சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நெருக்கடியை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் நிதியை கிராமங்கள் மற்றும் நகரங்கள் என வேறுபாடு பாராமல் பயன்படுத்தி வந்தால் பேரிடர் காலத்தில் தொகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிட உதிவியாக இருக்கும். எனவே இந்த வழிமுறைகளை காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close