fbpx
RETamil News

மெட்ரோ ரயில் நில ஆக்கிரமிப்பிற்காக மக்கள் கடும் எதிர்ப்பு !

மெட்ரோ ரயில் பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு தி.நகர் குடியுருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் , விரைவான பயணத்திற்காகவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதன் சேவை பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் அதன் சேவை விரிவுபடுத்துவதற்காக நில ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது கோடம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங்ரோடு ஆகிய இடங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க நில ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு தி.நகர் குடியுருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு இந்த மெட்ரோ ரயில் சேவைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றின் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்ட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இந்த போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அந்த குடியிருப்பு வாசிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

கங்கை அம்மன் கோவில் தெரு, விவேகானந்தா தெரு ராமகிருஷ்ணா தெரு ஆகிய பல தெரு மக்கள் இந்த நில ஆக்கிரமிப்பிற்கு அந்த குடியுருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு பல தலைமுைகளாக வசித்து வருவதாகவும், தங்கள் குழந்தைகள் இங்குள்ள பள்ளி, மற்றும் கல்லூரிகளில்
வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு அவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close