Special Intensive Revision (SIR)by Election Commission–இந்தியசுயராஜ்கட்சியின் ஊடக அறிக்கை..

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளை முதல் தொடங்க விருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில்வாக்காளர்பட்டியல்சிறப்புதீவிரதிருத்தத்தைமேற்கொள்ளவிருப்பதாகஏற்கனவேதேர்தல்ஆணையம்தரப்பில்இருந்துதெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வாக்களர் பட்டியல் சிறப்புத்திருத்தம்தொடர்பானமுழுவிவரங்களைஇன்றுதேர்தல்ஆணையம்வெளியிட்டிருக்கிறது. முன்னதாக, பீகாரில் S.I.R ன் மூலம் 30 லட்சம் பேர் நீக்கியதற்கு திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட S.I.R அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. # ஒரே நாடு ஒரே கட்சி ஒரே மதம் போன்றவற்றை நோக்கிய பாஜக செயல்படுகிறது. # மாநிலத்தில் உள்ள கட்சிகளை ஒழித்துக்கட்டல். தமிழ்நாட்டில் 62 தேசிய அளவில் 479 # பீகாரில் 60 லட்சம் பேர் வாக்காளர்கள் நீக்கம். # தனது பாஜக தனக்கு வேண்டியவற்றை தேர்தல்ஆணையத்தின் மூலமும் வருமான வரித்துறை மூலமும் அமலாக்கத்துறை மூலமும் எல்லாவற்றையும் சாதித்துக் கொள்கிறது.இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் பாஜகவை தவிர இந்தியாவில் எந்த கட்சியும் தேர்தல் ஆணையத்தில் இருக்காது. அதற்கான முன்மாதிரியான நடவடிக்கை தான் இது. அதேபோல்தான் இந்தியாவில் இந்துக்களை தவிர வேறு யாரும் ஓட்டு போடக்கூடாது என்ற நிலைமை கூடிய விரைவில் வந்துவிடும். அம்பேத்கர் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாயம் ஓட்டுரிமை அப்படிங்கிற நிலை மாறி இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் ஓட்டளிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் வந்துவிடும் இதுவும் அதற்கான முன்மாதிரியாகும். சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது முழுக்க முழுக்க பொய் பித்தலாட்ட கதையாகும். நீங்கள் ஓட்டளிக்கும் மையத்திற்கு வாக்களிக்க செல்கிறீர்கள், திடீரென்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் உங்களுக்கு எவ்வளவு அவமானம்❓ எவ்வளவு வேதனை❓ நீங்கள் இந்திய ஜனநாயகத்தை சேர்ந்தவர் அல்ல என்பது எப்பேர்பட்ட அயோக்கியத்தனமான செயல். இது எல்லாம் இந்த சிறப்பு சீர்திருத்தத்தால் நிகழும். படிக்காத பாமர மக்கள் என்ன செய்வார்கள் பெண்களுக்கு இதைப்பற்றிய புரிதல்கள் எதுவும் தெரியுமா.? 18 வயது பூர்த்தியானவர்கள் இது ஓட்டளிக்க முடியுமா என்பதை இதில் எந்த சந்தேகம் இவை எல்லாம் வடிகட்டலுக்கான முழுமையான தந்திரமாகும். இந்தியாவில் உள்ள 98 சதவீத மக்களுக்கு இதைப்பற்றிய அடிப்படை அறிவு யாருக்கும் கிடையாது. ஏன் படித்தவர்களுக்கே கிடையாது. அப்படி இருக்கும்போது தேர்தல் ஆணையம் இந்த மாதிரி செயல்படுவது சட்ட விரோதமானது ஜனநாயகத்திற்கு எதிரானது சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறியுள்ளபடி, கண்டித்துள்ளபடி தேர்தல் ஆணையம் தன்னை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சூழ்ச்சிகரமான வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. இந்த வேலைக்கு மூல காரணம் பாஜக மட்டுமே. எப்படி ஈவிஎம் மெஷின் பித்தலாட்ட கதையோ அதே மாதிரிதான் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம். இதற்கு எல்லோரும் நாம் எல்லோரும் சேர்ந்து போராடினால் ஒழிய தேசிய அளவில் விடிவுகாலம் பிறக்காது. தமிழக மக்களாகிய நாம் இதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவிற்கு தமிழ்நாடு, தமிழக மக்கள், தமிழ் என்றாலே அவர்களுக்கு வேப்பங்காயை போல் கசக்கின்றது. எப்படியாவது புறவாசல் வழியாக பின் வாசல் வழியாக குறுக்கு வழியில் திருட்டுத்தனமாக பித்தலாட்டம் செய்தாவது தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடிக்கவேண்டும்என்றஒரேநோக்கத்தோடுபாஜகசெயல்பட்டுகொண்டிருக்கின்றது இது எக்காலத்திலும் எவ்வளவு கவர்ந்து கொடுத்தாலும் நிதி தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்றது தெள்ளத் தெளிவானது நாம் அனைவரும் இதை உணர்ந்து உள்ளோம்.#. இந்திய அளவில் கடந்த 80 ஆண்டு காலமாக எந்தவித எப்பேர்ப்பட்ட ஆட்சி ஆனாலும் சரி தமிழர்கள் பாஜகவை எதிர்த்தது போல் எந்த ஆட்சியையும் தமிழர்கள் எதிர்க்கவில்லை. காரணம், அதில் தேசிய அளவில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் மனதில் உண்மையான சீர்திருத்தம் இருந்தது. உண்மையான நல்லெண்ணம் இருந்தது. உண்மையான ஒற்றுமை மேம்பாடு இருந்தது. இது எதுவுமே பாஜகவுக்கு கிடையாது. இல்லை. அவர்களுக்கு அவர்கள் மட்டும்தான் ஆட்சி செய்ய வேண்டும். #. எனவே பாஜகவின் அனைத்து சூழ்ச்சிகரமான தந்திரங்களையும் எந்திரங்களையும் நாம் தூக்கி எ
றிந்து உடைத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.