fbpx
OthersRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

தடுப்பு மருந்து வந்தவுடன் மெட்ரோ ரயில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும்!

school & metro reopen after corona vaccine invention

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தொற்றிற்கான தடுப்பு மருந்தை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனம் தயாரிக்க ஒப்புதல் பெற்றுள்ளது.

பள்ளி கல்லூரிகள் மற்றும் ரயில் நிலையங்கள் முதலியவை திறப்பதை குறித்து மத்திய பள்ளி கல்வி செயலாளர் அனிதா கார்வால் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பிற மாநிலங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.அந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலன்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்கள் யாரும் பள்ளிகள் திறப்பதை விரும்பவில்லை. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த பின்னரே  குழந்தைகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

எனவே பள்ளி குழந்தைகளின் நலனில் எச்சரிக்கையாக இருக்கிறோம். அதே போன்றே மெட்ரோ சேவைகளும் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மனிதவள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close