fbpx
Others

S.P. வேலுமணி—தமிழகமக்கள்அதிமுக ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள் !

கோவை., மார்ச்., 24

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் அதிமுக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுக்கரை நகர செயலாளர் சண்முக ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி, வைகைசெல்வன், சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய முன்னால் அமைச்சர் S.P. வேலுமணி, அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் மகிழ்சியில் இருந்தார்கள் ஆனால் தற்போது மக்கள் திமுக என்னும் இருண்ட காலத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். திமுக ஆட்சியில் கடன் வாங்கி தமிழக மக்களின் தலையில் சுமையை ஏற்றி வருகின்றனர், அதிமுக ஆட்சியில் கோவையில் எங்குபார்தாலும் பாலங்களாக இருந்தது. மக்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தாலிக்கு தங்கம், மடிக்கணிணி திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி என்று கூறினார். 2026 இல் அதிமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். தெடர்ந்து பேசிய முன்னால் அமைச்சர் வைகைசெல்வன் திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. வேலுமணி அவர்களால் தான் கோவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் தான் கோவை மக்கள் மனதில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை வைத்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் போர்வாள் போன்றவர்கள். புரட்சிதலைவி அம்மாவை உலகமுழுவதும் தாயாக ஏற்றுகொள்கிறார்கள். டாஸ்மார்க் கடைகள் தற்போது அப்பா கடையாக மாறியுள்ளது. திராவிடமாடலுக்கான அர்த்ததை முதலமைசர் சொல்லுவாரா! ஆயிரம் கோடி அளவில் மதுபான உழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து முதலமைச்சர் விளக்கம் தருவாரா, தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் 1.25 இலட்சம் கடன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பதுகாப்பு இல்லை. யார் அந்த சார் என்று கேட்ட எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா, மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். ஒருமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறு கிடையாது. மீண்டும் எடப்பாடியை கோட்டைக்கு அனுப்பவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

கோவை மாவட்ட நிருபர்  க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close