fbpx
RETamil NewsTechnologyஉலகம்

மறைந்து வரும் சனிக்கோளின் வளையங்கள் – அதிர்ச்சி தகவல் தரும் நாசா விஞ்ஞானிகள் !

நம்மை சுற்றியுள்ள கோள்களை சூரிய குடும்பம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட இந்த சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக இருப்பது சனிகோளாகும். இந்த சனிக்கோளின் சிறப்பம்சமே அதன் வளையங்களாகும்.அப்படிப்பட்ட அந்த வளையங்கள் மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.

சனிக்கோளானது சூரியனிடமிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சனிக்கோளின் நடுப்பகுதியை சுற்றி தட்டையான வளையங்கள் காணப்படுகின்றது.சனிக்கோளிற்கு அழகுசேர்க்கும் இந்த வளையங்கள் பெரும்பான்மையாக பனித்துகள்கள் , பறைத்துகல்கள் மற்றும் தூசுகளாலும் ஆனவையாகும். அவ்வாறு மற்ற கோள்களில் இல்லாத சனிக்கோளில் மட்டுமே இருக்கும் இந்த வளையங்கள் தற்போது மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

சூரியகுடும்பத்தின் நீரைவிட குறைவான அடர்த்தி உள்ள கோள் சனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சனிக்கோளின் வளையங்களில் தூசிகள் படிந்ததால்தான் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சனிக்கோளில் உள்ள இந்த வளையங்கள் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலுமாக மறைந்துவிடும் என்று நாசா விஞ்ஞானிகள் தகவலை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close