fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

4 மாவட்ட விவசாயிகளுக்காக முதலமைச்சர் செய்த காரியம்…!

Chief minister edapaddi palanisamy declares fund

சென்னை:

நாமக்கல், சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

உலகில் காணப்படும் மாவுப் பூச்சிகள் மரவள்ளியை மட்டும் அல்லாது பப்பாளி, மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது. அதனால் மகசூலும் பாதிக்கப்படுகிறது.

எனவே இவற்றை முறையான மருந்துகளை கொண்டு கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயிர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மரவள்ளிப் பயிரில் ஏற்படும் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.1,750 வீதம் 3,112 ஹெக்டேருக்கு நிதியை ஒதுக்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close