fbpx
Others

(TUJ) திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்நடைபெற்றது.

அனைத்து வட்ட , ஊரக செய்தியாளர்களை நல வாரியத்தில் சேர்க்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்(டியூஜெ) பேரவையில் தீர்மானம்!  தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்(TUJ) திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் திருவள்ளூர் வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள வருவாய் துறை அலுவலர் கட்டிடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர். முருகக்கனி தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் ஊத்துக்கோட்டை எம். யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ் நாகராஜ், சீனு, அந்தோணி, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பெ. ரூபன்.இணை செயலாளர் எம். ஏ.கருணாநிதி அனைவரையும் வரவேற்றனர்.மாவட்ட பொருளாளர் வி. பி. கோவிந்தராஜுலு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
மாநில மாவட்ட செயல்பாடு குறித்து பல்வேறுவிவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்ட கௌரவ தலைவராக புலவர் தேவராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.தலைவராகஆர். முருகக்கனி, மாவட்ட பொதுச்செயலாளராக பெ.ரூபன், பொருளாளராக வி. பி. கோவிந்தராஜுலுஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.செயலாளர்களாக திருத்தணி முனுசாமி, திருவள்ளூர்எம்.ஏ. கருணாநிதி, ஊத்துக்கோட்டை யுவராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் செய்யப்பட்டனர்.துணைத் தலைவர்களாக திருவள்ளூர் பாஸ்கர், பெரியபாளையம் சீனிவாசன்,தண்டலம் சரவணன் ஆகியோரும், மாவட்ட இணைச் செயலாளர்களாக திருத்தணி அந்தோணி, திருவள்ளூர்வெங்கடேஷ்வரலு, பெரியபாளையம் நாகராஜ்,ஆவடி ராஜீவ் காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர.
செயற்குழு உறுப்பினர்களாக பெரியபாளையம் செல்வம்,பொன்னேரி பாலகணபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதர செயற்குழு உறுப்பினர்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளனர்.கூட்டத்தில் மாநில தலைவர்பி. எஸ். டி. புருஷோத்தமன் சிறப்புரை ஆற்றினார்.மாநில பொதுச்செயலாளர் கே. முத்து, மாநில பொருளாளர் வந்தவாசிவி. ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.திருவள்ளூர் தனி வட்டாட்சியரும், வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகியுமான பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.இறுதியாக தும்பாக்கம் ஆர். சரவணன் நன்றி கூற பேரவை நிறைவு பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:  அனைத்து வட்ட ஊரக செய்தியாளர்களை நல வாரியத்தில்சேர்க்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.நல வாரியத்தில் உறுப்பினராக சேர உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்.ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.
குறிப்பாக விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமான நிபந்தனையை ரத்து செய்து, விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.வட்டாரஅளவில்பணிபுரியும்அனைத்துபத்திரிகையாளர்களுக்கும் இலவச வீட்டுமனை அல்லது சலுகை விலையில் வீட்டுமனை வழங்க வேண்டும்.சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நமது சங்கமான தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (டி.யூ.ஜே) பெயரினை பயன்படுத்துவது தொடர்பாக வழக்கு இன்று வரை நிலுவையில் இருக்கும் போது, அதை மறைத்து, தனக்கு சாதகமாக நீதி வழங்கியதாக பொய்யான தகவலை பரப்பி வரும் ஜார்ஜ் என்பவரின் நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென மாநி‌ல சங்கத்தை பேரவை கேட்டுக்கொள்கிறது.மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Related Articles

Back to top button
Close
Close