fbpx
Others

N.D.A. கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தோல்வி நிச்சயம்–முதலமைச்சர் ஸ்டாலின்…

பாஜக - அதிமுகவின் பிரம்மாண்ட கூட்டணி.. திமுகவின் பிரதான போட்டியாளராக மாறிய NDA  கூட்டணி..! அதிரும் அரசியல் களம்..! | Tamil News Online | Latest News In  Tamil ...தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தான் எழுதப்பட வேண்டும்! அதேபோல், வளர்ச்சியும், தெற்கில் தமிழ்நாட்டில் தொடங்கி தான் எழுதப்பட வேண்டும்! இந்த க்ரோத் ஹிஸ்டரியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்களை எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்தான்!அதில் முதல் குற்றச்சாட்டு, அரசியல் வாரிசு! இதற்கு நான்ஏற்கெனவேபதில்சொல்லிவிட்டேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும், அவர்கள் மக்களுக்கு முன்னால் நின்று, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு பெற்றால்மட்டும்தான், வெற்றி பெற முடியும். எனவே இது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு!  அடுத்து சொல்வது என்ன? ஊழல்! இதுவரைக்கும் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை யாராவது ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்களா?கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி. எங்கள் மீது பழி சுமத்திக்கொண்டேஇருக்கிறார்கள்.நான்பா.ஜ.க.விடம்கேட்பதுஎன்வென்றால்,உங்கள்கூடஇருக்கும்எல்லோருமேஊழல்வாதிகள்தான். அதிலும், உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக. நீங்கள் கூட்டணியில் இல்லாத சமயத்தில், அவர்கள் மீதுஎத்தனைகுற்றச்சாட்டுகளை சொன்னீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில்அவர்கள்எல்லாம்வெளுத்துவிட்டீர்களா? என்னுடைய கேள்வி இதுதான்அடுத்து, இந்து விரோத கட்சி என்று பேசுவார்கள். ஆனால், உண்மை என்ன? இந்தியாவிலேயே, பா.ஜ.க.ஆளுகின்றமாநிலங்களில்கூடஇல்லாதஅளவிற்கு, நாங்கள் ஆட்சி அமைத்து இந்த ஆயிரத்து 730 நாட்களில், நான்காயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம்! உண்மையான பக்தர்கள் மகிழ்ச்சிஅடைகிறார்கள்! வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் இப்படி, பாஜக ஆதாரத்தோடு பதில் சொல்லிவிட்டேன். ஆனால், அவர்களோ, நாங்கள் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை! இப்போது உங்கள் முன்பாகவும் கேட்கிறேன். இந்தி திணிப்பை ஏற்காததால் கொடுக்காமல் இருக்கும் கல்வி நிதி எப்போது வரும்?    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை கூட முறையாக தரவில்லையே ஏன்? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கிறது. இது எதற்குமே அவர்களிடம் இருந்து பதில் வராது! தமிழ்நாட்டிற்கு ஏனென்றால், இதுஎல்லாமே,பா.ஜ.க.செய்திருக்கக்கூடிய துரோக லிஸ்ட்! அவர்கள் ஒவ்வொரு முறை இங்கு வரும்போது, அந்த லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்கிறது! நாங்கள் எதற்காக இவ்வளவையும் பேசுகிறோம் என்றால், நம்முடைய இந்திய நாடு ஒற்றுமையாக, வலிமையாக இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவையும் சொல்கிறோம்.நாங்கள் நாட்டின்Union Home Minister Amit Shah in the valedictory function of the BJP State unit’s “Tamilagam Thalai Nimira Tamilanin Payanam” campaign at Pudukottai, in Tamil Nadu, on January 4, 2026. He reiterated that the NDA will form the government in the State. He did not mention AIADMK general secretary Edappadi K. Palaniswami’s name during his entire speech.  யூனிட்டிக்காகப் பேசுகிறோம். பா.ஜ.க.வோ யூனிஃபார்மிட்டி பேசி, பாசிச அரசியல் செய்கிறது! மாநிலங்கள்தான். நாட்டின் அடித்தளம்! இந்தியா என்பது, “யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்”. இதை பா.ஜ.க. உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் ஒன்றியஅரசுஎன்றுநினைவுப்படுத்திக்கொண்டேஇருக்கிறோம். N.D.A.என்கிறபெயரில்,தமிழ்நாட்டில்பா.ஜ.க.உருவாக்கியிருக்கும் கூட்டணிக்கு என்று எந்தக் கொள்கையும் கிடையாது அது,முழுக்கமுழுக்ககட்டாயத்தினாலும், ஒருசிலரின்சுயநலத்திற்காகவும்கூடியுள்ளதுரோகக்கூட்டணி…அதுநீட்தேர்வுவிலக்குப்பற்றி  அக்கறையுடன்கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சியினர். அவர்களின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.-விடம் அதை வலியுறுத்த ஏன் தயங்குகிறார்கள்? அஞ்சி நடுங்குகிறார்கள்?தமிழ்நாட்டு மீது பா.ஜ.க. வலுக்கட்டாயமாக திணித்திருக்கும் திட்டங்கள் பற்றி குரல் எழுப்ப திராணியில்லாமல் இருப்பவர்கள். நெஞ்சை நிமிர்த்தி எப்படி மக்களுக்காக கேள்வி எழுப்புவார்கள்தமிழ்நாட்டின்  தன்மானத்தைக் காப்பதற்கு எப்படி தலைநிமிர்ந்து பேசுவார்கள்? அதனால்தான், நடைபெற இருக்கின்ற தேர்தல் தமிழ்நாடு வெர்சஸ் N.D.A. என்று அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! வழக்குகளால் மிரட்டப்பட்டு, முழுக்க முழுக்க சுயநலத்தோடு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய N.D.A. கூட்டணியை, அடுத்தடுத்த துரோகங்களுக்கான அச்சாரமாக தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்! நான் உறுதியாக சொல்கிறேன் N.D.A.-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாடு நிச்சயம் வழங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close