MTCபேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு’சென்னை ஒன்’தொழில்நுட்பக் கோளாறு…
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுளது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள்மட்டுமேவழங்குவார்கள்என்றும்யுபிஐ,டெபிட்மற்றும்கிரெடிட்கார்டுகள்மூலமானபணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாகவெளியிடப்பட்டுள்ளபதிவில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-ன்னைமாநகர்போக்குவரத்துக்கழகப்பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில்(ETM)எதிர்பாராததொழில்நுட்பக்கோளாறுஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள்என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், ‘சென்னை ஒன்’ (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.