fbpx
Others

மெட்ரோ ரயில்கள் கொள்முதல்செய்ய திட்டம்…..

28 ரயில் தொடர்களை பன்னாட் நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. சென்னையில் இதுவரை 4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும் நிலையில் 2028-ல் 6 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.  அந்த செய்தி குறிப்பில் கூறியதாவது:மொத்தம் 54.1 கி.மீ நீளத்துடன் கூடிய இரண்டு வழித்தடங்களை கொண்ட சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1 (நீட்டிப்புடன் சேர்த்து) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டம்-Iஇன் இயக்கத்திற்காக 4 பெட்டிகளுடன் கூடிய 52 இரயில் தொடர்களை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே கொள்முதல் செய்திருந்தது. முற்பகல் உச்ச சேவைகள் காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் உச்ச சேவைகள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலுமாக, தற்போது ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் (அதிகாலை 5.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை) இரயில்சேவைகள் இயக்கப்படுகின்றன .இயக்கத்திற்காக இருப்பில் வைக்கப்படும் இரண்டு இரயில் தொடர்களையும் சேர்த்து மொத்தம் 45 இரயில் தொடர்கள் வாராந்திர உச்ச பயன்படுத்தப்படுகின்றன. நேர இயக்கங்களுக்காக சென்னை மெட்ரோ இரயில் கட்டம்-1 இன் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் இரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.   இதுகுறித்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கருத்துருவிற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருத்துரு ஒன்றிய அரசின் வழியாக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுப்பிவைக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close