மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்க பாஜக துடிக்கிறது—மம்தாபானர்ஜி…
மேற்கு வங்கத்தில் இப்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் இருகட்சிகளும் போட்டிப்போட்டுக்கொண்டுவிமர்சனங்களைமுன்வைக்கிறது. இதற்கிடையே பாஜக மீது மம்தா சில பகீர் குற்றச்சாட்டுகளைமுன்வைத்துள்ளார்.மேற்குவங்கத்தின் பாங்குராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவைக் காட்டமாக விமர்சித்தார். அவர் அங்குப் பேசுகையில்,”பாஜகஒருபுதியதொகுதிமறுவரையறை சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்கப் போகிறார்கள்.. மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களை அண்டை மாநிலங்களான பீகார் அல்லது ஒடிசாவுடன் இணைக்கப் பாஜக துடிக்கிறது.. அங்கிருக்கும் வங்காளிகளை அவர்கள் குறிவைப்பார்கள்” என்றார். மேலும், தேர்தல் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் கைது செய்து, கட்சியை முடக்கப் பாஜக சதி செய்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், மேற்குவங்கமக்களைக்காப்பாற்றத்தான்தனிஆளாகப்போராடிவருவதாகவும்இந்தகைது களைப்பார்த்துஎல்லாம்அஞ்சப்போவதுஇல்லைஎன்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.மம்தா குறிப்பிடும் இந்த தொகுதி மறுவரையறை தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2023-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம்) என்பது 2027 மக்கள் தொகைகணக்கெடுப்பிற்குப் பிறகுதான் அமலுக்கு வரும். அதன் பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்தான் 2034ல் பெண்கள் 33% இடங்களைப் பெற முடியும்.ஆனால், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பே இதை அமல்படுத்த பாஜக சில சட்டத் திருத்தங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வையும் கூட்ட உள்ளது.. இந்தத் தொகுதி மறுவரையறை மூலம் மேற்கு வங்கம் பிரிக்கப்படும் என்பது மம்தாவின் அச்சம்.அதேநேரம் மம்தாவின்
இந்தக் குற்றச்சாட்டு திடீரென உருவானதும் அல்ல. கடந்த காலங்களில் பாஜக தலைவர்கள் பேசிய சில விஷயங்கள் மம்தாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக உள்ளது. அதாவது கடந்த 2024ல் அப்போது பாஜக மேற்குவங்கமாநிலதலைவராக இருந்த சுகந்தா மஜும்தார், மேற்கு வங்கத்தின் 8 வடக்கு மாவட்டங்களை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்க வேண்டும் எனப் பிரதமர் அலுவலகத்திற்குப் பரிந்துரை அனுப்பியிருந்தார். அதேபோல பாஜகவின் எம்பி நிஷிகாந்த் துபே, ஊடுருவலைத் தடுக்க மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களை ஒரு ‘யூனியன் பிரதேசமாக’ மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இதை எல்லாம் வைத்தே மம்தா இப்போதுகிளப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். மாநிலத்தைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என மம்தா சென்டிமென்ட் அரசியல் குற்றச்சாட்டை மேற்கு வங்க மக்கள் நம்புவார்களா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.