fbpx
OthersRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கர்நாடக முதல்வர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது: தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா!

Karnataka CM office sealed

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து  வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,விதான் சவுதாவில் உள்ள  கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஓட்டுநர் உட்பட சுமார் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை குறித்து முதல்வர் எடியூரப்பாவின் செயலாளர் ரேணுகாச்சார்ய,”  முதல்வர் நலமுடன் தான் உள்ளார். எந்த விதமான பிரச்னையும் இல்லை. சிறிது நாட்கள் முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்” என கூறியுள்ளார்.

இதன் விளைவாக முதல்வர் எடியூரப்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,” நான் நலமுடன் உள்ளேன். அலுவலக்கத்தில் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நான் வீட்டில் இருந்து சில காலங்கள் பணி செய்ய முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தினர். கடந்த மாதம் 27 ஆம் தேதி இதே போன்றே முதல்வர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது குரிப்பிடத்தக்கது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close