[Kadambur Raju]–@ [TKS Elangovan]. விஜய்க்கு கேள்வி..?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக வலிமையாக நல்ல தலைவரை கொண்டிருப்பதால் தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். எங்களுடன் கூட்டணியில் இருப்பதெல்லாம் கட்சிகள். திமுகவுடன் கூட்டணியில் இருப்பவை இயக்கங்கள் தான் [Kadambur Raju]. அவர்களை எல்லாம் நாங்கள் கட்சியாக கருத மாட்டோம். திருமாவளவனுக்கு வேங்கைவயல் பிரச்சனை உள்ளிட்டவற்றை பற்றி கேட்க யோகியதை இல்லை. அவர் அதிமுகவை விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும். விஜய் காமெடி செய்கிறார். தவெக எத்தனை தேர்தல்களை சந்தித்துள்ளது. நகர்மன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் கூட சந்திக்காத கட்சி அது. அவர் சொல்லும் ஏதாவது நடைமுறைக்கு வருமா. புரட்சி தலைவர் தொடங்கிய அதிமுகவின் வரலாறு எல்லாம் தம்பி விஜய்க்கு தெரியாது. கட்சி ஆரம்பித்த ஆறாவது மாதமே துணிச்சலாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். திண்டுக்கல் தொகுதிக்காக நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டோம். அன்றைக்கு இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக இருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காங்கிரஸ், பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், 180 தொகுதிகளில் வென்று அசுர பலத்துடன் ஆளுங்கட்சியாக இருந்த திமுக ஆகியோர் போட்டியிட்டனர்.இவர்களை எதிர்த்து ஆறு மாத குழந்தையாக இருந்து வென்று தன் பலத்தை நிரூபித்தது அதிமுக. இந்த வரலாறு எல்லாம் தம்பி விஜய்க்கு தெரியாது. விஜய் கட்சி ஆரம்பித்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. கட்சி தொடங்கியவுடன் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தவெக போட்டியிட்டதா. திமுக – தவெக இடையே தான் போட்டி என்று அவர் எதையாவது சொல்லட்டும். அதைப்பற்றி கவலை இல்லை எங்களுக்கு போட்டி யாரும் இல்லை.இன்றைய தேர்தல் களத்தில் எங்களுக்கு போட்டியாக எந்தக் கட்சியும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவர்களுக்கு தான் போட்டி, இவர்களுக்கு தான் போட்டி என்று சண்டை போட்டு கொள்கிறார்கள். அதிமுகவுடன் தான் போட்டி என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அதிமுகவின் சுயரூபம், சுயபலம் என்ன என்று விஜய்க்கு தெரியும். அவர் மேடையில் சும்மா காமெடி செய்கிறார். அதை நாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்றார்
. [TKS Elangovan]. விஜய் வருமானவரித்துறை அதிகாரியும் இல்லை. தேர்தல் அதிகாரியும் இல்லை. கரூர் விஷயதில் நாங்கள் விஜயை சிக்கவிடவில்லை. கரூர்தவெககூட்டத்திற்கு மக்கள் வந்தனர். விஜய் நண்பகல் 12 மணியளவில் பேசுவார் என்று காலை 9 மணியில் இருந்தே மக்கள் காத்திருந்தனர். உச்சி வெயிலில் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் இரவு 7.30 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 43 மக்கள் உயிரிழந்தது இயல்பானது. 12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு ஏன் அவர் இரவு 7.30 மணிக்கு வந்தார். அதற்கான காரணத்தை இப்போது வரை அவர் ஏன் சொல்லவில்லை. மக்கள் காத்திருக்கிறார்கள் என யோசித்து சுமார் 1 மணிக்குவந்திருந்தால்கூடபரவாயில்லை. தனக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என தெரிந்து குறிப்பிட்ட நேரத்திற்கோ, சற்று முன் பின்னோ வந்து பேசியிருந்தால் மக்கள் தப்பித்திருப்பார்கள். அதை விஜய் செய்யவில்லை. அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை” என்றார்.