fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து என தகவல்…? தமிழக அரசுக்கு பரிந்துரை!

Quarterly exam may cancel in future

சென்னை:

அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 10ம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது ஜூன் மாதம் முடிவடையும் நிலையிலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.

இந் நிலையில் கல்வித் துறை ஆணையர் பிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவது குறித்த பரிசீலனைகளை தமிழக அரசு கேட்டுள்ளது.

இக்குழு மாணவர் நலன் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து வைத்துள்ளது.

அந்த அறிக்கையில் செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்து, காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close