fbpx
Others

வீணாகும்–அல்லிநகரம் பயணியர் நிழற்குடை ரூ 8லட்சம்…?

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அல்லிநகரம் பயணியர் நிழற்குடை ரூ 8லட்சம் மதிப்பில் சட்டமன்றஉறுப்பினர்நிதியில்கட்டப்பட்டுள்ளபேருந்து நிழற்குடையை மக்கள்பயன்படுத்துவதற்கு தடையாக இந்தஅரசியல் கட்சிகளும், வியாபார நிறுவனங்கள் மற்றும் கோயில் திருவிழா சில சமூக அமைப்புகள்……..இப்படிஇடையூறாக விளம்பரபேனர்களைவைப்பதைதட்டிகேட்கதேனிஅல்லிநகரம்நகராட்சி  நிர்வாகத்திற்கும் திராணி இல்லை.!  இதில்மாவட்டநிர்வாகமும்தலையிடுவதில்லை ! பொதுமக்களும்ஏன் என்று சிந்திப்பதும் இல்லை  தூய்மை இந்தியா போன்ற திட்டம் எத்தனை வந்தாலும் , மக்கள் எப்படா ஓட்டுக்கு பணம் கொடுப்பான் வாங்கி தண்ணி போடலாம் என்ற சிந்தனை மக்களிடையேஇருக்கும் வரை நாடு முன்னேறவழியில்லை. தனி ஒருவனுக்குஉணவில்லை யெனில் ஜெகத்தினைஅழித்திடுவோம் என்று பாடிய பாரதிபொது சொத்துக்களை சேதப்படுத்தும்நாதாரிகளைப்பற்றி பாடவில்லையே.!

மக்கள் அனுபவிக்க அரசின் திட்டங்கள் மூலம்செய்தாலும் அதைபொதுமக்களாகிய நாம் இவற்றை பாதுகாக்கவேண்டாமா..??? மக்களே சிந்தியுங்கள்!!! எதற்காக இந்த பயணியர் நிழற்குடைகள்……. இது போன்ற கட்டவுட்கள், பேனர்கள் வைக்கவா ? நீதிமன்ற ஆணைகள் பிறப்பித்தும் கூட மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை நிர்வாகமும் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இவற்றை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்……………………………………………….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close