fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பிரியாணி விற்பனையால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரிப்பு!

தமிழகத்தில் பிரியாணி மற்றும் பாஸ்ட புட் போன்றவற்றின் மோகம் அதிகரித்து வரும் நிலையில் ,தற்போது தமிழகத்திற்கு பிரியாணி விற்பனை மூலம் மட்டும் வருடத்திற்கு ரூ.5,500 கோடி வருவாய் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகலாயர்கள் காலத்தில் அவர்களின் முக்கிய உணவாக பிரியாணி இருந்தது , அது தமிழகத்தில் அறிமுகமானது முதல் , தமிழக மக்களின் விருப்பமான உணவாக பிரியாணி அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பிரியாணியை விரும்புகிறார்கள்.

பிரியாணியை எப்போது கொடுத்தாலும் அதை வேண்டாம் என்று சொல்பவர்கள் மிக குறைவே. அப்படி இருக்கும் போது சில நாட்களுக்கு முன் நாய் கறி என்று சந்தேகப்பட்டு சென்னையில் 2000 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பிரியாணி விற்பனை பாதிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்போது வெளியாகியுள்ள தகவல் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கிறது.


தமிழகத்தில் பிரியாணி விற்பனை மூலம் மட்டும் ஒரு வருடத்திற்கு ரூ.5,500 கோடி வருவாய் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள பிரபல உணவகங்களில் பிரியாணியை ஒரு நாளைக்கு மட்டும் 40,000க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடுகின்றனர்.

அப்படிப்பட்ட பிரியாணிக்கு தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பிரத்யேக உணவகங்கள் உள்ளன. மேலும் இதை மீன், சிக்கன்,மட்டன், ஈரால் , முட்டை, காய்கறிகள் போன்றவற்றை உபயோகித்து பல்வேறு வகைகளில் பிரியாணியை செய்யலாம் என்பதால் எத்தனை கடைகள் வந்தாலும் மக்களுக்கு இதன் மீது உள்ள மோகம் எப்போதும் குறையாது என்று கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close