fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால் – மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழையானது தாமதமாக தொடங்கியுள்ளது. அவ்வாறு தொடங்கிய பருவமழையானது தாமதமாக தொடங்கியிருந்தாலும் தற்போது அந்த தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய மழையானது நேற்று ஏறவுமுதல் கனமழையாக உருவெடுத்து இன்று அதாவது திங்கட்கிழமை காலை விடியவிடிய பெய்து கொட்டி தீர்த்தது. இவ்வாறு இரண்டு நாட்களாக பெய்த இந்த மழையானது ஜூன் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழைபொழிவில் 97 சதவிகிதம் பெய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3-வது நாளாக நேற்றும் மும்பையில் விடிய விடிய கனமழை பெய்தது எனவே சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்தும் ,தாழ்வான இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நல்ல மழை பொலிவை பெற்றுவருவதால் ஏரிகளில் உள்ள தண்ணீர் இருப்பின் அளவு அதிகரித்து வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மும்பையில் புறநகர் ரெயில்கள் எச்சரிக்கையுடன் இயக்கப்பட்டு வருகின்றது. கனமழை காரணமாக 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மழையானது தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளதால் தீவிர முன்னேற்பாடுகளை மராட்டிய அரசு செய்து வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close