HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை…
HMPV தொற்று எதிரொலியாக முதல் மாவட்டமாக நீலகிரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த குறிப்பிட்ட (Specific) மருந்து, தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே, பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணியவும். நோய் அறிகுறிகள் இருந்தால், பொது இடங்களுக்குசெல்லக்கூடாது.HMPVகுறித்துசந்தேகம் இருப்பின்கட்டணமில்லாஎண்104மற்றும்9342330053இல்தொடர்புகொள்ளலாம்.நேற்றுவரை 7 குழந்தைகளுக்கு HMPV தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கர்நாடகாவின் ஷிவமோகாவில் 6 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 2 வயதுக்கு உள்பட்ட இக்குழந்தைகள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிவிட்டனர். பெங்களூருவில் நேற்று 2 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பே, இச்சம்பவம்நடந்துள்ளதுதற்போதுதெரியவந்துள்ளது.சீனாவில் பரவி வரும் HMPV (Human Metapneumovirus) வைரஸ் குறித்து இந்தியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த வைரஸ் பொதுவாக சாதாரண காய்ச்சலையும் மூச்சுத்திறன் குறைவையும் ஏற்படுத்தக்கூடியது. இவை பெரும்பாலானவர்களுக்கு ஆபத்தானதாக இருக்காது. இந்தியாவில் இதுவரை யாரும் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இதுபோன்றவைரஸ்தொற்றுகளைதவிர்க்கபொதுமக்கள்கீழ்கண்டமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
- கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
- மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணியவும்.
- தனிநபர் சுகாதாரத்தை சிறப்பாக பராமரிக்கவும்.
- சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இந்த அறிவுறுத்தலின் மூலம், HMPV வைரஸ் குறித்து தவறான தகவல்களின் அடிப்படையில் அச்சப்படுவதத் தவிர்க்க பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சரியான தகவல்களை அறிந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிப்பது மட்டுமே எந்தவித வைரஸ் தொற்றையும் தடுக்க உதவக்கூடும் என சுகாதார நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.