fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

மேற்கு வங்கத்திற்கு நிலுவை நிதியை வழங்க வேண்டும்..! மம்தா கோரிக்கை!

West Bengal CM mamata requests fund

கொல்கத்தா:

மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதி உதவியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலம், உ.பி., போன்ற பல்வேறு பகுதிகளில் ஐ.சி.எம்.ஆர்., உயர்திறன் ஆய்வகங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனாவை எதிர்த்து போராட மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் சமீபத்தில் வீசிய அம்பான் புயலால், நிதி முழுவதும் செலவழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புயல் நிவாரணத்திற்கென ரூ 53,000 கோடி இன்னும் தர வேண்டியதுள்ளது.

எங்கள் மாநிலத்தில் புயல் நிவாரணத்திற்காக எங்கள் நிதி அனைத்தையும் செலவழிக்கும் போது எங்களால் எப்படி கொரோனாவை எதிர்த்து போராட முடியும். எனவே மத்திய அரசு நிதி நிலுவையை மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டும் என்று பேசினார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close