fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

டாஸ்மாக் திறப்பு…! காற்றில் விடுவது நியாயமா, தாங்குமா தமிழகம்..?

Kamalhaasan tweets about tasmac opening

சென்னை: டாஸ்மாக் திறந்து, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?  என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.

ஊரடங்கின் தளர்வின் ஒரு பகுதியாக படிப்படியாக முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகள் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னைக்கு அதிக பாதிப்பு என்பதால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன் அதன் முன்பு கூடி, ஆனந்தமாய் ஆடிப்பாடி மதுபானங்களை வாங்கி சென்று குடித்து மகிழ்ந்தனர். அரசுக்கு கிடைத்த வருவாய் எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது.

இந் நிலையில், டாஸ்மாக் திறப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.

ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close