Others
DIGITAL ARREST SCAM மூலம் இழந்த சுமார் ரூ 8 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
கடந்த 04.01.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த சதீஷ்குமார் (வ /41) த/பெ லட்சுமணன் என்பவர் Digital Arrest Scam மூலம் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC) அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி ஆய்வாளர் திரு.தியாகராஜன் (CCPS) அவர்களின் தலைமையிலான போலீசார் இன்று (28.02.2025) இழந்த ரூ. 8,00,646 பணத்தை மீட்டு சதீஷ்குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராக புகார் அளிக்க 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.