CSB வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்..:
கோவை., ஏப்., 10 :கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள CSB வங்கியின் முன்புரம் – Befi – மாவட்டபொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து மகேஷ்வரன் கூறியதாவது CSB வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பத்தாவது இருதரப்பு ஒப்பந்தம் வரை செயல்படுத்தி வந்த CSB வங்கி நிர்வாகம், 11 வது மற்றும் 12 வது இருதரப்பு ஒப்பந்தங்களை வங்கியில் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை. இந்த இரு ஒப்பந்தங்களையும் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க சிரியன் வங்கி ஊழியர் சம்மேளனம் தொடர்ந்து போராட்ட இயக்கங்கள் நடத்தி வருகிறது. வங்கி தொடர்ந்து லாபகரமாகச் செயல்பட்டு வந்தாலும், வங்கியில் நிதி மற்றும் பல்வேறு விஷயங்களைக் கணக்கில் கொண்டு, இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த மறுப்புத் தெரிவித்து வங்கி நிர்வாகம் சங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. சமீப காலங்களில் CSB வங்கி நிர்வாகம், வங்கிப் பணிகளுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் ஒப்பந்தம் முறையிலேயே பணியமர்த்தி வருகின்றது. 2024 ஆண்டு வங்கி அறிக்கையின்படி மொத்தம் வங்கியில் பணிபுரியும் 7863 ஊழியர்களில் 995 ஊழியர்களும் அதிகாரிகளும் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக இருதரப்பு ஒப்பந்த ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். மீதமுள்ள 6864 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வங்கியை நிர்வாகம் தங்களது கோரிக்கைகளை நிராகரித்து வருவதன் காரணமாக இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த போரட்டத்தில் நாகேந்திரராஜா – BEATN தமிழ்நாடு துணைத் தலைவர், சிவலிங்கம் – கனரா வங்கி பணியாளர் சங்கம் மாநில தலைவர், ஜெயச்சந்திரன் – இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஸ்டாப் அசோசியேஷன்துணை பொதுச் செயலாளர், ஜிவி சிவானந்தம் – பேங்க் ஆப் பரோடா ஸ்டாப் யூனியன், என்.ஜெயபாலன் – யூனியன் பேங்க் ஆப் இந்தியா எம்ப்ளாய் யூனியன் தமிழ்நாடு ஆகிய பலர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்
