
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அதில் முதல் நடவடிக்கையாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவது ஊரடங்கு மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல் செய்யப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து , பிற செயல்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க கேட்டுகொள்ளப்பட்டனர்.

உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-
” உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவு சரியாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ் நாட்டில் நோய் தொற்று அதிக அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளையும்,பிரதமர் காணொலி காட்சி மூலம் ஏப்ரல் 11 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார்.
இக்கலந்தாய்வின் போது , தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், நிவாரண நடவடிக்கைகள் பற்றியும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமரிடம் நான் எடுத்துரைத்தேன். நானும் மற்ற முதலமைச்சர்களும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
நோய் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டும் , ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும் , ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகின்றது.
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நோக்கத்தில் ,பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும் , தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.
* ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதின் காரணமாக , தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் மே மாததிற்க்கான சர்க்கரை, எண்ணெய், பருப்பு , அரிசி போன்றவை நியாயவிலை கடைகளில் விலையூன்றி வழங்கப்படும்,
* கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெட்ரா அணைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் , குடும்பம் ஒன்றிற்கு , இரண்டாவது முறையாக 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.
* பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்க்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, சர்க்கரை , சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் , ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அணைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, ” விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டில் இருங்கள் ” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் , அணைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து , கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டு கொள்கிறேன் ” இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.