fbpx
RETamil Newsஇந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் மத்திய அரசு…! இனி நோ வெயிட்டிங்

For migrant workers 200 non AC trains from June 1 says Railway minister

டெல்லி: நாடு முழுவதும் வரும் 1ம் தேதி முதல் குளிர்சாதன வசதி அல்லாத 200 ரயில்களை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வரும் 1ம் தேதி  முதல் இந்தியா முழுவதும் ஏ.சி இல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இதை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும்.  அதற்கான அட்டவணை விரைவில் ரயில்வேயின்  அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆகையால் லட்சக்கணக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த ரயில்கள்  முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags

Related Articles

Back to top button
Close
Close