fbpx
HealthTamil Newsஉணவு

வெந்தயத்தின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 4

Benefits of Fenugreek - In your Kitchen Part 4

தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில் ருசிக்கு அதிக இடமா ஆரோக்கியத்துக்கு அதிக இடமா என்று பட்டிமன்றம் வைத்தால் சாலமன் பாப்பையா கூட தீர்ப்பு சொல்ல திணறி போகலாம். தமிழரின் பாரம்பரிய சமையல் முறையின் தன்மை அப்படி. ஒவ்வொரு உணவும் ருசியாகாவும், ஒவ்வொரு உணவும் மருந்தாகவும் இருக்கும். அதுவும் இந்த ரசம் இருக்கிறதே; சளி, காய்ச்சலா, மிளகு ரசம் சாப்பிடலாம். வயிற்று உபாதையா, சீரக ரசம் சரி செய்யும். வாதம், பித்தம், கபம் சார்ந்த பிரச்சினையா, வேப்பம்பூ ரசம் கைவசம். உணவு தயாரிப்பு மட்டுமல்லாமல், உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளும் பல்வேறு நன்மை கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது வெந்தயத்தின்  நன்மைகள். முந்தைய அத்தியாயத்தில் சீரகத்தை பற்றி பார்த்தோம். பொதுவாக கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது, கடுகு, மிளகு, சீரகம் வாங்குவது நினைவில் இருக்கும் அளவுக்கு வெந்தயம் நினைவில் வராதது வெந்தயத்தின் தவறல்ல. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, குறிப்பாக அழகை மேம்படுத்துவதில், ஆண்கள் கவனிக்க, (என்னடா பெண்களை குறிப்பிடவில்லை என்று யோசிக்காதீர்கள், பெண்கள் ஏற்கனவே அதை பயன்படுத்துவதில் கில்லாடிகள்) வெந்தயத்தின் பங்கை தெரிந்து கொண்ட பின் அதை மட்டும் வாங்க மறக்கவே மாட்டீர்கள்.

வெந்தயத்தின் நன்மைகள்

கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெந்தயம் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படியான வரலாற்று சிறப்பு மிக்க வெந்தயத்தின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

  • மலச்சிக்கலை போக்குகிறது
  • சீரண ஆற்றலை அதிகரிக்கிறது
  • சீதபேதியை போக்குகிறது
  • வயிற்று உப்புசம், வயிற்று கடுப்பு ஆகியவற்றை சரி செய்கிறது
  • நெஞ்செரிச்சலை போக்குகிறது
  • இருதய நலனை பாதுகாக்கிறது
  • கொழுப்பு அளவுகளை சீராக வைக்கிறது
  • இரத்த சோகையை போக்குகிறது
  • சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது
  • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
  • குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது
  • உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது
  • பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்கவும், மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் உணர்வு ரீதியான மாற்றங்களை சரி செய்யவும் உதவுகிறது
  • தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது
  • கல்லீரல் நலத்தை பாதுகாக்கிறது
  • சிறுநீரகக் கற்கள் உருவாவதை தவிர்க்கிறது
  • சரும பிரச்சினைகளை சரி செய்கிறது

பயன்படுத்தும் முறை

வெந்தயத்தின் பல சிறப்பு அம்சங்களில் ஒன்று அதை மிக எளிமையாக பல வகைகளிலும் பயன்படுத்தலாம். வெந்தயத்தின் பலன்கள் அனைத்தையும் முழுமையாக பெற அதை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தவும்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடவும்.

சிறிது வெந்தயம், ஒரு அங்குலம் இஞ்சி இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிடவும்.

சிறிது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி குணமாகும். பொடித்த வெந்தயத்தை சிறிது வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.

வெந்தயத்தை வறுத்து பொடித்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

அழகை அதிகரிக்கும் வெந்தயம்

அழகுலகில் வெந்தயத்துக்கென்றே தனி இடம் உண்டு. இதோ அவற்றின் சில பயன்பாடுகள்:

  • முகப் பருக்களை போக்குகிறது
  • முகத்தில் கரும்புள்ளிகளை போக்குகிறது
  • சருமத்தை பளபளப்பாக்குகிறது
  • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது (ஹையா)
  • சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குகிறது
  • வறண்ட சருமத்தை சரியாக்குகிறது
  • பொடுகை போக்குகிறது; கூந்தலை பளபளப்பாக்குகிறது
  • தலைமுடி உதிர்வைத் தடுப்பதோடு கூந்தல் வளர்ச்சியிலும் உதவுகிறது
  • இளநரையை போக்குகிறது

பயன்படுத்தும் முறை

இரவில் வெந்தயத்தை ஊற வைக்க சொல்லியிருந்தேன் அல்லவா. ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு அந்த தண்ணீரை முகத்தில் பூசி வரலாம்.

ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து முகத்தில் பூசி சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

ஊறிய வெந்தயத்தை அரைத்து கொஞ்சம் தேன் அல்லது பால் சேர்த்து முகத்தில் தடவி வரவும்.

முதல் நாள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை  அரைத்து, சிறிது தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து தலைமுடியில் பூசி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

ஊறிய வெந்தயத்தை அரைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி தலை முடியில் பூசி அரை மணி நேரம் கழிந்த பின் தலைக்கு குளிக்கவும்.

இன்னொரு முக்கியமான விஷயம், வெந்தய கீரையை உங்கள் வீட்டிற்குள்ளேயே வளர்க்கலாம். மண்ணிலும் வளர்க்கலாம், தண்ணீரிலும் வளர்க்கலாம். வெந்தயத்தின் நன்மைகள் அனைத்தயும் நீங்கள் வளர்க்கும் வெந்தயச் செடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close