fbpx
ChennaiRETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு!

சென்னை;

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது.

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குறிப்பாக பாதிப்புக்கள் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட  இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அரசு அமல்படுத்தியுள்ளது.

19ம் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 30ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த முழு ஊரடங்கில் சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மக்கள் யாரும் ஊரடங்கின் போது வாகனத்தில் வெளியில் வரவேண்டாம் எனக்கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close