fbpx
RE

கொரோனவால் குணமடைந்த பட்டியலில் கேரளா முதலிடம் காரணம் ஆயுர்வேதம் – பினராயி

இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலமாக கேரளா அமைந்துள்ளதற்க்கு
பினராயி விஜயன் பெருமிதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் மளமளவென இந்தியாவிலும் பரவி வருகின்றது. உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,1.30 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 12759 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 941பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் முதலில் இந்தியாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் கேரளாவில் தான் தொடங்கியது. தற்போது மாநில அரசின் போர்க்கால நடவடிக்கையினாலும், சுகாதாரத்துறையுன் தீவிர முயற்சியினாலும் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாக கொரோனா வைரசுக்கு பாதித்தவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் ;

கேரள மாநிலம் முழுவதும் 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்., இதுவரை 218 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதித்ததில் 264 பேர் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 8 பேர் வெளிநாட்டவர்.114 பேருக்கு தொடர்பு மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கேரளாவில் 97,464 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் உள்ளனர்.

ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வருகிறோம். கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை கொடுக்கிறோம். அது நல்ல பலனை அளித்து வருகிறது. இதனால் 56 சதவிகித நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.விரைவில் 100 சதவிகித நோயாளிகளை குணப்படுத்துவோம்.இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலமாக கேரளா மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close