fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு.! பன்வாரிலால் புரோஹித்

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2-ந் தேதி) கூடியது. சபாநாயகர் தனபால் தலைமையில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை முதலில் தொடங்கினார்.

அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கிய அவர் எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

நதிநீர்ப் பிரச்னையில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய ஆளுநர், மேகதாதுவில் புதிய அணை கட்டும் முதற்கட்ட ஆய்வுக்கு கண்டனமும் தெரிவித்தார்.

கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

திருவாரூர் தவிர மற்ற பகுதிகளில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close