fbpx
Others

உதயநிதி-சாலைகளின் நிலை குறித்து புகாரளிக்க ‘நம்ம சாலை’ செயலி.

 தமிழகத்தில் `பள்ளங்களற்ற சாலை’என்ற இலக்கை அடையும் வகையில், சாலையில் ஏற்படும் பள்ளங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்ய வேண்டும் என்பதால், 2023-24-ம் ஆண்டுமானியக்கோரிக் கையின்போது பிரத்யேகசெல்போன் செயலி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்அடிப்படையில் `நம்ம சாலை’ என்றமென்பொருள் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தச் செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சிநிலையத்தில், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மக்கள் பயன்பாட்டுக்காக செயலியை அறிமுகம்செய்தார். .தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆசியவளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்இரு வழித்தடமாகஅகலப்படுத்திமேம்படுத்தப்பட்டசாலைகளான சாலைகளான ரூ.204.70 கோடி மதிப்பீட்டில் மேலூர் –திருப்பத்தூர் சாலை, ரூ.198.65 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் – மன்னார்குடி சாலை, ரூ.219.47 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலை ஆகிய சாலைகளையும் அமைச்சர் உதயநிதிமக்கள்பயன்பாட்டுக்குதொடங்கிவைத்தார்.மேலும்,நெடுஞ்சாலைத்  துறை  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள 45 கோட்டபொறியாளர்கள், 192 உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் 274 உதவி பொறியாளர்களுக்கு சியுஜி எண் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், துறையின் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை பொறியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செயலியின் செயல்பாடு: நம்ம சாலை செயலி மூலம், நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும்பள்ளங்கள் குறித்து மக்கள்ஜிபிஎஸ் மற்றும் புகைப்படங்களுடன் புகார்களை பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம்செய்யப்பட்டவிவரம்அச்சாலைக்குரியபொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேரிடர் காலங்களில் மரம் விழுதல்,வெள்ளப்பெருக்குபோன்றவைகுறித்தும்புகார்கள்அளிக்கஏதுவாகசெயசெயலிஉருவாக்கப்பட்டுள்ளதுஎனநெடுஞ்சாலைத்  துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close