fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

20 பேர் உட்காரலாம்..! அந்த 5 பேரை நிற்க வைக்கலாம்..! பஸ்சில் இனி இப்படித்தான் பயணிக்கணும்…!

Only 25 persons allowed in tamilnadu buses

சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கினால் 25 பயணிகளை மட்டும் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் நாளை ரயில் சேவை துவங்க உள்ளது. முதல் கட்டமாக முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 15 ரயில்கள் இயக்கப்படுகிறது.  இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனின் மட்டுமே செய்ய முடியும்.

இதனைத்தொடர்ந்து தற்போது பேருந்து போக்குவரத்து எப்போது துவங்கப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உரடங்கு முடிந்த பின் பேருந்து போக்குவரத்து துவங்கப்படும் என தெரிகிறது.

அதற்காக, தலைநகர் சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கான நடைமுறைகள் என்னென்னவென திட்டமிடப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பேருந்தில் சமுக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 20 பேர் மட்டும் உட்கார அனுமதிக்கலாம்.

நின்று கொண்டே பயணம் செய்ய 5 பேருக்கு அனுமதி தரலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதேபோல மெட்ரோ ரயிலில் மொத்தமாக 160 பேரை மட்டுமே ஏற்றி செல்வது என்றும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close