fbpx
Others

97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது- – மத்திய இணை மந்திரி

டெலிபோன் என்பது ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாகவும், ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவும் இருந்தது. ஆனால் 1995-ம் ஆண்டு செல்போன் புழக்கத்திற்கு வந்து, இன்றைக்கு அது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அங்கமாகிவிட்டது. பாமர மக்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரை, ஒவ்வொருவரின் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான். இந்த நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள்இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது - மத்திய இணை மந்திரி தகவல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் ராஜேவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்பொழுது, 2014ம் ஆண்டு இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றார். தற்பொழுது அந்த நிலை மாறி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 சதவீத செல்போன்களை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறினார். மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 12 பில்லியனை எட்டியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close