fbpx
Others

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18+1 , அதிமுக ஒதுக்கப்படலாம் என தகவல்…

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 PMKதமிழக அரசியல் களம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் அடுத்த பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்இணைந்து23தொகுதிகளில்போட்டியிட்டது.அதில் நான்கு தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்த நிலையில் தான் உண்மையான பாமக என அன்புமணி ராமதாஸ் கூறினார். ஆனால் நிறுவன தனக்கே முழு அதிகாரம் இருக்கிறது என ராமதாஸ் கூறி வந்தார்.இதற்கிடையே பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குபிறகுஅன்புமணிராமதாஸ்,அதிமுகபாஜககூட்டணியில்இணைந்திருக்கிறார். இதற்கிடையே தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவுகள்அன்புமணிராமதாஸுக்கு சாதகமாக வந்தது. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அன்புமணி ராமதாஸுக்கு தான் சொந்தம் என நீதிமன்ற உத்தரவு கிடைத்திருக்கும் நிலையில் உற்சாகமடைந்திருக்கும் அன்புமணி தரப்பு அடுத்த கட்ட வேலைகளை துவக்கி விட்டது.மறுபுறம் நீதிமன்ற படிக்கட்டுகளை நோக்கி ராமதாஸ் தரப்பு நகர்ந்து வருகிறது. எது எப்படி எனினும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு அன்புமணி ராமதாஸுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை ஆராய்ந்த அன்புமணி தரப்பு தற்போது அதனை அதிமுக தலைமையிடம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சுமார் 25 தொகுதிகள் அந்த பட்டியலில் இருக்கும் நிலையில் 18 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.தற்போது பாமக வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி, அந்தியூர், அரூர், ஆற்காடு, ஓமலூர், கும்மிடிப்பூண்டி, குன்னம், சங்கரகிரி, சோளிங்கர், செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், தர்மபுரி, திருவள்ளூர், நெய்வேலி, பாப்பிரெட்டி, பாலக்கோடு, பென்னாகரம், புவனகிரி, மயிலம், விருத்தாச்சலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.அதில், அந்தியூர், ஆற்காடு, ஓமலூர், கும்மிடிப்பூண்டி, குன்னம், சங்கரகிரி, சோளிங்கர், செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், தர்மபுரி, நெய்வேலி, பாலக்கோடு, பென்னாகரம், புவனகிரி, விருத்தாச்சலம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இது கிடைத்த தகவல்படி உத்தேச பட்டியல் தான்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுக பாமக தரப்பு அமர்ந்து பேசி இந்த தொகுதிகளில்சிலமாற்றங்களுடன்இறுதியாகலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாமகவில் விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் அடுத்த கட்டமாக வேட்பு மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்த இருக்கிறார். அதற்கு பிறகு பாமகவின் தொகுதி பட்டியலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close