fbpx
Others

நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம்—சிறப்பு செய்தி..

நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் திருPGR.ராஜாராமன் அவர்கள்தலைமையிலும் கௌரவத்தலைவர் கே.ராஜப்பா மாவட்ட பொருளாளர்திரு எஸ் எம் டி கருணாநிதி மாவட்ட துணை செயலாளர் திரு ராஜன் ரமேஷ் மாவட்ட தொகுதி செயலாளர் திரு முகிலன் முருகன் திரு சிந்து சுப்பிரமணியன் அமைப்பு செயலாளர் திரு வெடிக்கடை சேகர் துணை தலைவர் தீன் ஷாகுல் ஹமீதுதுணை அமைப்புசெயலாளர்V.கரிகாலன்முன்னிலையில்செயற்குழுகூட்டம்நடைபெற்றது.செயலாளர் திரு வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.  1.நமது வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகிகள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது  2. பொருளாளர் திரு கே ரமேஷ் அவர்கள் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்  3.தமிழக அரசு சார்பில் நீடாமங்கலம் மேம்பால பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது மத்திய அரசு செய்யக்கூடிய ரயில்வே தண்டவாளத்திற்கு இடையேயான பாலம் இதுவரை வேலை தொடங்கவில்லை அதற்காக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து விபரம் கேட்டறிந்து அதற்கு சரியான பதில் வரவில்லை என்றால் கடை அடைப்புடன் கூடிய சாலை மறியல் நடைபெறும் 4. நம்முடைய நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் கோரிக்கை வைத்ததின் பேரில் நம்முடைய தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு முரசொலி எம்பி அவர்கள் தொடர்ந்து ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ஒரு நிமிடம் நீடாமங்கலத்தில் நின்று செல்வதற்கு குரல் கொடுத்து வருகிறார்கள் மேலும் மன்னை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார் அவருக்கு அனைவராலும் நன்றி தெரிவிக்கப்பட்டது 5. தமிழ்நாடு முதல்வர் வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் இலவசமாக பதிவு செய்து கொள்ள மார்ச் மாதம் வரை அவகாசத்தை நீடித்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது 6. வர்த்தகர் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்களாக திரு எஸ்.சங்கர் வீரா ஏஜென்ஸி திரு SMT D.கருணாநிதி மற்றும் 2026-27-க்கான புதிய நியமன உறுப்பினர்கள் அனைவருடைய முழு ஆதரவுடன் நியமிக்கப்பட்டார்கள்  கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் உயர் மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் இணைச் செயலாளர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்ட தீர்மானங்களை செய்திதொடர்பாளர் திரு எம்.ராஜேந்திரன் வாசித்தார் துணைச் செயலாளர் திரு வேணு. அண்ணாதுரை அவர்கள் நன்றி கூறினார்கள் 🙏

Related Articles

Back to top button
Close
Close