fbpx
Others

தெருநாய் கடியால் குறிப்பாகக் குழந்தைகளிடையே ரேபிஸ் நோய் பரவுவது…?

தெருநாய் விவகாரத்தில் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து மீண்டும் அவற்றைப் பிடித்த இடங்களிலேயே விடுவிக்க வேண்டும் எனச் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, நாய்களை கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கலாம் என்று கூறியது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களை மட்டுமே காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்றும் மற்ற நாய்களைப் பிடித்த இடத்திலேயே விட்டுவிடலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைத் தடை செய்த சுப்ரீம் கோர்ட், அதற்காகப் பிரத்தியேக இடங்களை அமைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 11 உத்தரவை மிகவும் கடுமையானது என்று கூறிய விக்ரம் நாத் அமர்வு, அதை மாற்றியமைத்ததுடெல்லியில் தெருநாய் கடியால் குறிப்பாகக் குழந்தைகளிடையே ரேபிஸ் நோய் பரவுவது குறித்த வெளியான செய்திகளின்அடிப்படையில் ஜூலை 28ம் தேதி சுப்ரீம் கோர்ட் தெருநாய் விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close