Others
ராணிப்பேட்டை–அஇஅதிமுக அனைத்து நிர்வாகிகள் கைது..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அஇஅதிமுக கழகம் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ். எம். சுகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோஷம் எழுப்பும் பொழுது காவல் அதிகாரிகள் அஇஅதிமுக அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் எஸ். எம். சுகுமார் பேசியபோது மேல் விசாரம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மருத்துவர்கள் பணியின் போது ஆட்கள் இல்லாததால் நோயாளிகள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்று கேட்டால் கைது செய்து சிறையில் அடைப்பீர்களா என்று மாவட்ட செயலாளர் ஆவேசமாக பேசினார்.