fbpx
Others

ராணிப்பேட்டை – ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி. பிரகாஷ், டி.எல். பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சமகல்வி பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்தாபன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் நெமிலி ஆனந்தன் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பித்தார். பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், ராஜசேகர், சபாபதி, நாகலேரி ஆனந்த், சீனிவாசன், கமலக்கண்ணன், ஹரி ராமகிருஷ்ணன், நாவலன், எஸ்.எல்.டி.முருகன்,பழனிகுமார்,நரேஷ்,ஆச்சிரவி,புருஷோத்தமன், மூர்த்தி, பாலாஜி, கௌரிசங்கர், பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், சந்திரசேகர், டிக்காராமன், குப்புசாமி, வெங்கடேசன், நிர்மல்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

.

Related Articles

Back to top button
Close
Close