fbpx
Others

ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் – 19 வெட்டி கொலை..போலீஸ் விசாரணை..

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் – 19 என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில்,சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து தினேஷை தேடி வந்தனர்,இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து,தினேஷ் மற்றும் நண்பர்களான காமேஷ் மற்றும் நண்பர்களுடன் மது அருந்த ஆந்திர பகுதிக்கு சென்றதாவும்,மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது,இதனால் ஆத்திரமடைந்த காமேஷ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தினேஷை வெட்டி கொலை செய்து சடலத்தை ஆந்திர தமிழக எல்லையான பகுதியில் புதைத்ததாக கூறப்படுகிறது.இதனிடையே ஊத்துக்கோட்டை காவல் துறையினர் தினேஷின் நண்பர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டபோதுமதுபோதையில்தினேஷ்கொலைசெய்யப்பட்டதுதெரியவந்துள்ளது,,இதனிடையே படுகொலை நடைபெற்ற இடம் ஆந்திர மாநிலம் என்பதால்சத்தியவேடு தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் தமிழக போலீசரும்- ஆந்திர போலீசரும் தினேஷை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து சடலத்தை திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் தலைமையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

இது குறித்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  ( அரசுசெய்தி.. நிருபர். மருதுபாண்டி )

Related Articles

Back to top button
Close
Close