fbpx
Others

7 மூத்தஅதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் அந்தஸ்து–தமிழக அரசுஅரசாணை..

2 IAS Officers Given New Roles in Tamil Nadu, Mangat Ram Sharma Appointed  ACS of PWD - Officers Info1995-ஆம் ஆண்டு ஐஏஎஸ் கேடர் பிரிவைச் சேர்ந்த 7 மூத்த அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு (Chief Secretary Grade) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தப் பதவி உயர்வுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இன்று வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தற்போது பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றி வரும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், டிட்கோ (TIDCO) தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா ஆகியோருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் நிதித் துறைச் செயலாளர் டி.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் மற்றும் தற்போது மத்திய அரசுப் பணியில் இந்தியத் தலைமை நில அளவையாளராக பணியாற்றி வரும் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா ஆகியோரும் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவிதமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? ரேஸில் இத்தனை பேரா.. "இவரை" டிக்  அடிக்கிறாரா ஸ்டாலின்? | Who will be the next Tamilnadu Chief Secretary? - Tamil  Oneindia உயர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பதவி உயர்வுக்காகத் தற்காலிகமாகப் புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல், 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக (Principal Secretary) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் சமயமூர்த்தி, முதலமைச்சரின் தனிச் செயலாளர் சண்முகம், பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், சமூக நலத்துறைச் செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி வைத்தியன் உள்ளிட்டோருக்கு இந்த உயர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பதவி உயர்வுகள் அனைத்தும் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close