தேனி மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் –சிறப்புசெய்தி.


Greetings from Indian Red Cross Society,
Theni District.வணக்கம்.
இன்று தேனி மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தியன் ரெட் கிராஸ் தேனி மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மிகச் சிறப்பாகவும், மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்று முடிந்தது.புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரின் ஒத்த கருத்துக்களோடு ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட விதம் மற்ற மாவட்டங்களுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.தலைமை ஏற்று சிறப்பித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், வழிநடத்திய மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த தலைமையிடத்து வட்டாட்சியர் அவர்களுக்கும், கலந்து கொண்டு புதிய நிர்வாகக் குழுவை தேர்வு செய்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும் ஆதரவும் ரெட்கிராஸ் இயக்கத்தின் மனிதநேய பணிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் வேல்முருகன்