fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை நடவடிக்கை

வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதில் நீரவ் மோடிக்கு சொந்தமான 8 கார்கள், கட்டிடங்கள், தொழிற்சாலை, இயந்திரங்கள் மற்றும் வைர நகைகளை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு 147 கோடி ரூபாயாகும். இந்த சொத்துக்கள் அனைத்தும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

.

Related Articles

Back to top button
Close
Close