fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு – சென்னையில் தொடங்கப்பட்டது.

அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்க்கான டிக்கெட் முன்பதிவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

மேலும் ஜனவரி 11 முதல் 16 வரை சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கல் சிறப்பு பேரூந்துகளுக்கான சிறப்பு கணிணி முன்பதிவை இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கோயம்பேட்டில் மட்டும் 26 டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.அதேபோல் தாம்பரத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லி மற்றும் மாதாவரத்தில் ஒரு கவுண்டரும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவிற்காக திறக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் மாதவரம், தாம்பரம் , கே.கே.நகர் போன்ற இடங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு சென்னை மற்றும் வெளி இடங்களில் இருந்து சுமார் 24,708 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close